kangatharan | Saturday, March 21, 2020 |



அன்பான உறவுகளே!

உலகளாவிய ரீதியில் கொரோனா (COVID 19) பேரிடர் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரானனு எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

எனவே அனைத்து மக்களும் சுய கட்டுப்பாட்டுடன் அரசாங்கமும் அரச சுகாதாரத் துறையும் முப்படையினரும் கூறுகின்ற அனைத்து வழிமுறைகளையும் உதாசினம் செய்யாது கடைப்பிடித்து ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனாவை (COVID 19) நாட்டை விட்டு விரட்டியடிப்போம்.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா(COVID 19)  தொடர்பான வதந்தியான செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அரச அங்கிகாரம் பெற்ற செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மாத்திரமே மக்கள் நம்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதுடன்.

கொரோனா (COVID 19) தொற்றினால் பாதிக்கப்ட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையே துச்சமாகக் கருதி சிகிச்சை அளிக்கின்ற சுகாதாரத் துறையினருக்கும் அவர்களுக்கு உறுதுணையாகச் செயற்படுகின்ற முப்படையினர் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், ஊடகத் துறையினர் அனைவருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, இன, கலாசார வேறுபாடுகளை மறந்து நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டி நிற்கின்றோம்.

பணிப்பாளர் மற்றும் நிருவாகத்தினர்
உலக நண்பர்கள் அமைப்பு
இலங்கை

Category: