அன்பான உறவுகளே / நன்கொடையாளர்களே!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் வெருக்கினால் இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுவதனைக் காண்கின்றோம்.

எனவே தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவுவதற்காக தங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம். இந்த உதவிகள் உடனடியாக வழங்குவதற்கான உலர்உணவு பொருட்கள் கொள்வனவிற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான பொருத்தமான வாழ்வாதார திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

எனவே புலம் பெயர் உறவுகளே, அரச சார்பற்ற நிறுவனங்களே, பொது அமைப்புக்களே பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் தற்போது கன மழை வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களால் இயன்றதை இம் மக்களுக்கு உதவுவதற்கு நன்கொடை வழங்குங்கள்.



Bank Details                  

Account Holders Name : World Friends In Need (WFN) 

Name of the Bank          : Bank Of Ceylon 

Branch                           : Kallady 

Account No                   : 0072844732 

Currency                        : Sri Lankan Rupees – LKR 

Swift code                      : BCEYLKLX 

 


அன்பான உறவுகளே / நன்கொடையாளர்களே!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவின் காரணமாக இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுவதனைக் காண்கின்றோம்.

எனவே தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவுவதற்காக தங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம். இந்த உதவிகள் உடனடியாக வழங்குவதற்கான உலர்உணவு பொருட்கள் கொள்வனவிற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான பொருத்தமான வாழ்வாதார திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

குறுகிய காலத்தில் குடும்ப வருமானங்களை அதிகரிக்கும் வழிவகைகளையும் ஏற்றுமதிசார் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விருத்தி செய்தல் தொடர்பாகவும் பயிற்சி வகுப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்குவதற்கு எமது நிறுவனம் தயாராக உள்ளதென்பதனையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.


Dear Donors!

 Seeking Donation for the people of Sri Lanka affected by the economic crisis

 Although all the people living here have been affected in some way due to the current economic downturn in Sri Lanka, we see that the low-income people are suffering the most from the daily diet.

 So, we expect help from Donors to help our people who have lost their livelihoods and are suffering economically. These aids will be used for the purchase of dry food items to be provided immediately and for appropriate livelihood projects for the economic development of the affected people.

 I would like to inform you that our NGO is ready to provide training classes and technical advice on ways to increase family income in the short term and to develop local products for export.


Bank Details                  

 Account Holders Name : World Friends In Need (W F N) 

Name of the Bank          : Bank Of Ceylon 

Branch                           : Kallady 

Account No                   : 0072844732 

Currency                        : Sri Lankan Rupees – LKR 

Swift code                      : BCEYLKLX 

 





Dear Donors,

COVID-19 Relief

At present, all the countries in the world are facing the disaster of Coronavirus (Covid 19). In Sri Lanka particularly in our mother land (North and East) people are facing difficulty.

Many people are struggling due to the Coronavirus pandemic, including families back home. The nationwide lockdown that was imposed on March 20th, 2020 left many people hungry and jobless. 

It especially took a heavy toll on people who live under the poverty line and rely on their daily earnings to put food on the table. That is why this campaign was very essential.

Please donate us to help the Peoples who affected by the Corona virus (COVID 19) disaster.

Note : click the donation button in our website to check the bank details to make the Donation.

Thank you,

அன்பான உறவுகளே!

அவசர உதவித் திட்டம் - கொரோனா (COVID 19) பேரிடர்

தற்போது உலகில் அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா (COVID 19) பேரிடரால் இலங்கையிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதனை யாவரும் அறிவீர்கள்.

இந்த நிலையில் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்க்கை நடாத்துகின்ற தாயகத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த எமது உறவுகளும் தங்களது தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டி உள்ளதனால் அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுவதனை அவதானிக்கின்றோம்.

நாட்டில் தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் போட்டுள்ளதனாலும் சமூக இடைபெளியினைப் பேனுதல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் காரணமாகவும் வெளியில் சென்று தங்களது உறவினர்களிடமிருந்தாவது உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும் முடியாமல் உள்ளதனைக் காண்கின்றோம்.

எனவே அன்பான உறவுகளே இந்த இக்கட்டான சூழ்நிலையில் எமது உறவுகள் உயிர் வாழ்வதற்கு மட்டும் தேவையான உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தங்களால் இயன்ற பண உதவியினை எமது உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் ஊடாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு மிகவும் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.

நிதியுதவி அனுப்பவேண்டிய வங்கிக் கணக்கு விபரம் எமது இந்த இணையத்தளத்தில் உண்டென்பதனையும் தொரிவித்துக்கொள்னின்றோம்.

நன்றி!



அன்பான உறவுகளே!

உலகளாவிய ரீதியில் கொரோனா (COVID 19) பேரிடர் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரானனு எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

எனவே அனைத்து மக்களும் சுய கட்டுப்பாட்டுடன் அரசாங்கமும் அரச சுகாதாரத் துறையும் முப்படையினரும் கூறுகின்ற அனைத்து வழிமுறைகளையும் உதாசினம் செய்யாது கடைப்பிடித்து ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனாவை (COVID 19) நாட்டை விட்டு விரட்டியடிப்போம்.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா(COVID 19)  தொடர்பான வதந்தியான செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அரச அங்கிகாரம் பெற்ற செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மாத்திரமே மக்கள் நம்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதுடன்.

கொரோனா (COVID 19) தொற்றினால் பாதிக்கப்ட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையே துச்சமாகக் கருதி சிகிச்சை அளிக்கின்ற சுகாதாரத் துறையினருக்கும் அவர்களுக்கு உறுதுணையாகச் செயற்படுகின்ற முப்படையினர் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், ஊடகத் துறையினர் அனைவருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, இன, கலாசார வேறுபாடுகளை மறந்து நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டி நிற்கின்றோம்.

பணிப்பாளர் மற்றும் நிருவாகத்தினர்
உலக நண்பர்கள் அமைப்பு
இலங்கை

இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நிரந்தர சமாதானத்தையும் கட்டியெழுப்புவதற்காகவும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கும் விசேடமாக மேற்குறித்த மாகாணங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துகின்ற நோக்கிலும் 3500 மில்லியன் இலங்கை ரூபா செலவில் பல வேலைத் திட்டங்களை 2020ம் ஆண்டில் செயற்படுத்துவதற்கு எமது நிறுவனம் தீர்மானித்துள்ளதால் குறித்த திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலகில் உள்ள நன்கொடையாளர்களிடம் இருந்து நிதியுதவியினை எதிர்பார்க்கின்றோம்.

நன்கொடைகள் வழங்குவதற்கு விரும்புவோர் கீழேயுள்ள வழிமுறைகளினூடாக நிதியினை அனுப்பலாம்.