அவசர உதவித் திட்டம் - கொரோனா (COVID 19) பேரிடர்

kangatharan | Wednesday, April 08, 2020 |

அன்பான உறவுகளே!

அவசர உதவித் திட்டம் - கொரோனா (COVID 19) பேரிடர்

தற்போது உலகில் அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா (COVID 19) பேரிடரால் இலங்கையிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதனை யாவரும் அறிவீர்கள்.

இந்த நிலையில் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்க்கை நடாத்துகின்ற தாயகத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த எமது உறவுகளும் தங்களது தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டி உள்ளதனால் அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுவதனை அவதானிக்கின்றோம்.

நாட்டில் தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் போட்டுள்ளதனாலும் சமூக இடைபெளியினைப் பேனுதல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் காரணமாகவும் வெளியில் சென்று தங்களது உறவினர்களிடமிருந்தாவது உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும் முடியாமல் உள்ளதனைக் காண்கின்றோம்.

எனவே அன்பான உறவுகளே இந்த இக்கட்டான சூழ்நிலையில் எமது உறவுகள் உயிர் வாழ்வதற்கு மட்டும் தேவையான உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தங்களால் இயன்ற பண உதவியினை எமது உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் ஊடாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு மிகவும் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.

நிதியுதவி அனுப்பவேண்டிய வங்கிக் கணக்கு விபரம் எமது இந்த இணையத்தளத்தில் உண்டென்பதனையும் தொரிவித்துக்கொள்னின்றோம்.

நன்றி!

Category: