விழிப்புலனற்றோருக்கான கணினிப் பயிற்சி நெறி

Mathan | Monday, October 29, 2012 |

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விழிப்புலனற்றோருக்கான கணினிப் பயிற்சி நெறியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கமைவாக 09.12.2012 ஆம் திகதி இல : 1/10, 4ஆம் குறுக்கு, கல்லடி வேலூர், மட்டக்களப்பு எனும் முகவரியில் புதிய கணினிப் பயிற்சி நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

          இந்தப் பயிற்சி நிலையத்திற்காக 22.10.2012 இல் 60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் டென்மார்க்கிலுள்ள் இரத்தினேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாள் பரிசாக இரண்டு கணினிகளும் மற்றும் இரவு நேர உணவும் வழங்கப்பட்டது.

     இந்த உதவிகள் உலக சிறுவர் நலன் காப்பகம் மற்றும் இஸ்தா சொலிடாறிற்றி மன்றம் ஆகிய அமைப்புகளின் அனுசரணையுடன் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், சக்தி மகளிர் இல்லம், பிறிலியன் விழிப்புலனற்றோர் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றினூடாக 09.12.2012 ஆம் திகதி வழங்கப்பட்டன.

   இந்தப் புதிய கணினிப் பயிற்சி நெறியை உதயன் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் திரு செல்வநாயகம் அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைத்ததுடன் இந்த நிகழ்வில் இஸ்தா சொலிடாறிற்றி மன்றத்தின் தலைவர் திரு கமலதாஸ் மற்றும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் தலைவர் திரு.ஏ.கங்காதரன் மற்றும் விழிப்புலனற்றோருக்கான உதவித்திட்டப் பொறுப்பாளர் திரு வரதன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள் 
 அத்துடன் பிறிலியன் விழிப்புலனற்றோர் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் மற்றும் விழிப்புலனற்ற மாணவர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Category: ,