உளவள விருத்திப் பயிற்சித் திட்டம்

Mathan | Monday, October 29, 2012 |

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த உளவள விருத்தி பயிற்சி நெறியானது தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவளத்தை மேம்படுத்துவதற்காக உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் முதலாவது உளவள விருத்தி பயிற்சிநெறி 09.04.2012 ஆம் திகதி திருகோணமலை தோப்பூர் பாடசாலையில் நடைபெற்றது இந்தப் பயிற்சி நெறியில் தோப்பூர் பிரதேசத்தில் வசிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் பயனாளிகளாகக் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    இதன் இரண்டாவது பயிற்சிநெறி திருகோணமலை கிளிவெட்டியில் இடம்பெற்றது இந்தப் பயிற்சிநெறியிலும் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொண்டு பயனடைந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சிநெறியானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.
    போரினால் பாதிக்கப்பட்டு மன உளச்சலுடன் வாழ்ந்துவரும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் ஆகியோரின் உளவளத்தை மேம்படுத்தி அவர்களை சமூக பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
    40 பேர் கொண்ட ஒரு முழுநாள் பயிற்சி நெறிக்கு செலவாகும் முழுத் தொகை சுமார் ரூபா 50000.00 ஆகும் (ஐம்பதாயிரம் இலங்கை ரூபா) எனவே ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூபா 1250.00 செலவாகின்றது ஒருவர் குறைந்தது ஏழு நாள் பயிற்சி பெறவேண்டும் இதனடிப்படையில் ஒருவருக்கு பயிற்சி வழங்குவதற்கு 8750.00 செலவாகின்றது.
    எனவே கருணை உள்ளம்கொண்ட நண்கொடையாளர்களே போரினால் பாதிக்கப்பட்டதனால் தங்களுக்கான வாழ்க்கையும் அழிந்துவிட்டதென நினைக்கும் எம் உறவுகளை அவர்களின் பழைய வாழ்க்கைக்கு திரும்பவும் கொண்டுவர இந்தத் திட்டத்திற்கு
தங்களால் இயன்றளவு உதவுங்கள்.Category: ,