போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதற்காக முல்லைத்தீவில் மாட்டுப் பண்ணை.
உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு (WFN) ஐக்கிய அமெரிக்காவின் புதிய சந்தர்ப்பங்கள் (NOW - WOW) என்ற தொண்டு நிறுவனத்தின் 12 மில்லியன் இலங்கை ரூபா நிதி உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்புதல் என்ற வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவிபுரம் என்ற இடத்தில் மாட்டுப் பண்ணை ஒன்று அமைக்கப்படுகின்றது.
முதல் கட்டமாக 40 பயனாளிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த வாழ்வாதார உதவித்திட்டத்தில் பயனாளிகளாக உள்ள அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் அனேகமானோர் அவயங்களை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Category: Mullaitivu, News, Projects