மாற்றுத் திறனாளிகளுக்கான அவசர உதவித் திட்டம்

Mathan | Monday, October 29, 2012 |


உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் கடந்த 2011 ஆம் ஆண்டு
கார்த்திகை மாதம் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு லண்டனிலுள்ள நம்பிக்கை ஒளி அமைப்பு மற்றும் ஜேர்மனியிலுள்ள நேசக்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் உதவி புரிந்தன. இத்திட்டமானது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் அவயங்களை இழந்து சமூகத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் வறுமையான நிலையில் உள்ள ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கும் அவசரமாக உதவிகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
     இத்திட்டத்தின் கீழ் லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதி உதவியுடன்
மட்டக்களப்பில் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து சமூகத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள நாட்டின் வடக்கு கழக்கு பகுதிகளைச் சேர்ந்த வலது குறைந்தோரை பராமரிப்பதற்காக லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு கல்லடியில் பராமரிப்பு இல்லம் ஒன்று கடந்த மாசி மாதம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பராமரிப்பு இல்லத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து ஊனமுற்ற 6 பெண்களும் அவர்களின் குழந்தைகள் 4 பேரும் மற்றும் கண்பார்வையற்ற 5 பெண்களும் அநாதையான நிலையில் மனித உரிமை இல்லத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவியுமாக மொத்தம் 16 பேர் தங்கியுள்ளனர். கண்பார்வையற்றவர்களில் 3 பேர் பல்கலைக்கழக படிப்பை முடித்த பட்டதாரிகள் இருவர் பல்கலைக்கழகம் செல்பவர்கள் இவர்களுக்கு ஆங்கிலப் பாடமும் கணினிக் கல்வியும் விசேடமான மென்பொருள் மூலமாக கற்பிக்கப்படுகின்றது. இங்குள்ள குழந்தைகளில் ஒருவர் வகுப்பு இரண்டிலும் மற்றவர் வகுப்பு மூன்றிலும் அருகிலுள்ள ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்.

     இவர்களின் மராமரிப்புக்காக மாதமொன்றிற்கு 150000.00 தேவையாக உள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான அவசர உதவித் திட்டத்தின்கீழ்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசதி குறைந்த வறுமையான நிலையில் உள்ள 11 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் தலா மூவாயிரம் வீதம் (பிரதேச செயலாளர் ஊடாக) மொத்தம் ரூபா 33000.00 வும் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு மாதாந்தம் தலா இரண்டாயிரம் வீதம் மொத்தம் 8000.00 ரூபாவும் வழங்கப்படுகின்றது. 
    இதற்கான நிதி உதவியையும் லண்டனில் உள்ள நம்பிக்கை ஒளி நிறுவனமே வழங்கி வருகின்றது. தற்போது செயற்படுத்தப்படுகின்ற இத்திட்டத்திற்காக மாதாந்தம் அண்ணளவாக இரண்டு லெட்சம் ரூபா தேவையாக உள்ளது. மேலும் இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அவசர உதவித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது காரணம் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த (உண்பதற்கே வழியில்லாத) அல்லது சமுதாயத்தால் கைவிடப்பட்ட அல்லது அனாதைகளாக உள்ள மாற்றுத்திறனாளிகள் பலநூறு பேர் எமது உதவிகளை அவசரமாக எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.
   எனவே உலகில் உள்ள அனைத்து கருணை உள்ளங் கொண்ட உறவுகளே இந்த உதவித் திட்டங்களில் நீங்களும் இணைந்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள். எமது உதவித் திட்டங்களில் நீங்களும் பங்குபற்றி நாம் எல்லாம் உலக
நண்பர்கள் என்ற ஒரே குடையின் கீழ் எம்முடன் வந்து இணையுங்கள்
Category: , ,