யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாவது கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிலையத்தினை WFN நிறுவனம் மட் பட்டிப்பளை பிரதேசத்தில் 18.07.2013 இல் திறந்தது

Mathan | Sunday, October 04, 2015 |

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கைவினைப் பொருட்கள் உற்பத்தித் திட்டம் மட் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 18.07.2013 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தினை மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் திருமதி வில்வரெட்ணம் பைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் தலமைப் பணிப்பாளர் திரு.ஏ.கங்காதரன் சந்தைப் படுத்தல் பிரிவின் முகாமையாளர் மனோகரி மற்றும் அமைப்பின் உத்தியோகத்தர்கள் அத்துடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சமூகசேவை உத்தியோகத்தர் கமல்ராஜ் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Category: ,