கல்வி அபிவிருத்தித் திட்டம்

Mathan | Saturday, October 29, 2011 |

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் கல்வியை விருத்தி செய்யும் நோக்குடன் கல்வி அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் 5ஆம் வகுப்பில் கல்வி கற்கும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற யுத்த பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் எமது நிறுவனத்தினால் நடாத்தப்பட்டன இதன் மூலமாக அவர்களின் தேர்ச்சி மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மேலும் கல்வியில் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் அவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் எமது நிறுவனத்தின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு எமது நிறுவனத்தின் உதவியுடன் விளையாட்டு விழாக்களும் நடாத்தப்பட்டுள்ளன.
   மேலே கூறப்பட்டுள்ள இந்த திட்டங்களுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கு பகுதகளில் வாழ்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு மாதாந்த உதவியும் வழங்கப்பட இருக்கின்றது
    இதனடிப்படையில் வகுப்பு 1 தொடக்கம் 7 வரை கல்வி கற்கும் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 3000.00 ரூபாவும் (இலங்கை ரூபா மூவாயிரம்) வகுப்பு 8 தொடக்கம் 13 வரை கல்வி கற்பவருக்கு 5000.00 ரூபாவும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவருக்கு 7000.00 ரூபாவும் வழங்குவதற்கு தீhமானித்துள்ளோம்.
    இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்டு தந்தை அல்லது தாய் தந்தையை இழந்த மாணவர்கள் 300 இற்கும் மேற்பட்டோர் எம்மிடம் உதவி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
   நன்கொடையாளர்கள் தங்களின் வசதிக்கேற்றவாறு தங்களுக்குப் பிடித்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உதவிகளை வழங்கலாம்.
அனைத்து புலம்பெயர் உறவுகளிடமிருந்தும் தாயகத்தில் வசிக்கின்ற தங்களுடைய உறவுகளின் கல்வி மேம்பாட்டிற்காக உதவியை எதிர்பார்க்கின்றோம்.
எமது நிறுவனம் இந்தத் திட்டத்திற்காக தனியான ஒரு அலகை எற்படுத்தி செயலாற்றத் திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை வங்கியில் ஒரு தனியான கணக்கை ஆரம்பிப்பதுடன் பயன் பெறுகின்ற மாணவர்களுக்கும் தனித்தனி கணக்குகளை ஆரம்பித்து ஒரு நிலையான கட்டளை மூலமாக மாதாந்தம் தன்னியக்கமான முறையில் பணபரிமாற்றம் செய்யப்படும்.
மேலும் இந்தத் திட்டத்தின் கணக்குகளை அனைத்து நன்கொடையாளர்களும் தாங்கள் விரும்பிய நேரம் பார்வையிடுவதற்கு வசதியாக எமது இணையத்தளத்தில் உடனுக்குடன் இக்கணக்குகள் யாவும் பதிவேற்றம் செய்யப்படும்.

Category: