மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவி கோரல்.

kangatharan | Wednesday, January 10, 2024 |


அன்பான உறவுகளே / நன்கொடையாளர்களே!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் வெருக்கினால் இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுவதனைக் காண்கின்றோம்.

எனவே தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவுவதற்காக தங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம். இந்த உதவிகள் உடனடியாக வழங்குவதற்கான உலர்உணவு பொருட்கள் கொள்வனவிற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான பொருத்தமான வாழ்வாதார திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

எனவே புலம் பெயர் உறவுகளே, அரச சார்பற்ற நிறுவனங்களே, பொது அமைப்புக்களே பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் தற்போது கன மழை வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களால் இயன்றதை இம் மக்களுக்கு உதவுவதற்கு நன்கொடை வழங்குங்கள்.Bank Details                  

Account Holders Name : World Friends In Need (WFN) 

Name of the Bank          : Bank Of Ceylon 

Branch                           : Kallady 

Account No                   : 0072844732 

Currency                        : Sri Lankan Rupees – LKR 

Swift code                      : BCEYLKLX 

Category: