பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டு ஏற்றுமதிக் கண்காட்சியில் WFN நிறுவனம் பங்கேற்பு

Mathan | Saturday, October 03, 2015 |


WFN நிறுவனம் 13.11.2013 தொடக்கம் 17.11.2103 திகதி வரை கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற ஏற்றுமதிக் கண்காட்சியில் கலந்துகொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

இந்த ஏற்றுமதி வாய்ப்பினால் ஐக்கிய ராச்சியம் ஜப்பான் மற்றம் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு இந்த கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் அத்துடன் இலங்கையில் உள்ள உல்லாசப் பயணிகள் அதிகமாக வருகைதருகின்ற பகுதிகளில் காட்சி அறைகளை அமைப்பதற்கான சந்தர்ப்பமும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டதால் எமக்குக் கிடைத்துள்ளது.
இதன் மூலமாக வடகிழக்கில் வேலைவாய்ப்பற்று வாழ்வாதார வசதி இன்றி இருக்கின்ற யுவதிகள் பயனடைகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது
Category: ,