kangatharan | Monday, June 27, 2022 |

 




அன்பான உறவுகளே / நன்கொடையாளர்களே!


பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்கு கைகொடுங்கள்.


ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் இலங்கையின் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளதனை உலக மக்களாகிய நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

வருமானம் அதிகரிக்காத நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடும் அவற்றின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ள. இதனால் மக்கள் பாரிய இடரினை சந்தித்துள்ளனர்.

எரிபொருள் எரிவாயுக்காக தற்போது மக்கள் வரிசைகளில் நின்றாலும் எதிர்காலங்களில் உணவுப் பொருட்களுக்கும் மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எனவே எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக எமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மக்களுடன் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும். 

இதற்கான செயற்திட்டத்தினை அமுலாக்கம் செய்வதற்கு எம்முடன் இணையுங்கள்.

செயற்திட்டங்கள்

   1. ஏற்றுமதிசார் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துதல்.

          அ. கைத்தறி மற்றும் கைப்பணி உற்பத்திகள்

         ஆ. தென்னை மற்றும் பனை சார் உற்பத்திகள்

          இ. சித்த ஆயுள்வேத மற்றும் மூலிகை சார் உற்பத்திகள்.


2. உள்ளூர் உணவு உற்பத்தியை மேம்படுத்துதல்

     அ. அரிசி மற்றும் தானிய (சோளன், பயறு, கடலை, உழுந்து) உற்பத்திகள்

    ஆ. மரக்கறி, கிழங்கு (மரவள்ளி) மற்றும் பழ (வாழை) உற்பத்திகள்

    இ. கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, காடை மற்றும் நாட்டுக்கோழி  


மேற்படி செயற்றிட்டங்களுக்கு முழுக்க முழுக்க உள்ளூர் மூலப்பொருட்களே பயன்படுத்தப்படும் அத்துடன் இயந்திர பாவனை குறைக்கப்பட்டு மனிதவலுவும் இரசாயண உரங்கள் இல்லாதவிடத்து சேதனப் பசளையும் பயன்படுத்தப்படும். Hybrid விதைகளுக்கு பதிலாக நாட்டு விதைகளும் மற்றும் நாட்டு மாடு, ஆடு, நாட்டுக்கோழி என்பனவும் பயன்படுத்தப்படுவதால் திட்டம் வெற்றியளிக்கும் காரணம் Hybrid இனங்களுக்கான இரசாயண உரம் மற்றும் தீவனம் என்பவற்றுக்கான தேவை இங்கு இல்லை.


அன்பான உறவுகளே எங்களிடம் நிலம், ஊழியம், மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பன உண்டு ஆனால் நிதி வசதி மட்டுமே இல்லை இதனை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தாயக மக்களுடன் நீங்களும் இணைந்து செயற்படுங்கள் நன்கொடை, நீண்டகாலக் கடன் மற்றும் முதலீடு செய்வதன் மூலமாக நீங்களும் பொருளாதார மேம்பாட்டுக்கான பங்குதாரர்களாக மாறுங்கள்.

Bank Details

                          

*      Name               : World Friends In Need (W F N)

*      Bank                 : Bank Of Ceylon

*      Branch              : Kallady

*      Account No       : 0072844732

*      Currency           : Sri Lankan Rupees – LKR

*      Swift code        : BCEYLKLX

 

For more Details : www.wfncsl.com     Whats app : 0773 117 517



Category: